Latest News
முன்னூற்று நாலு 304 (THREE-NOUGHT-FOUR) விளையாட்டின் முதலாவது இணையவழி உருவாக்கமும் 1வது உலகக்கிண்ணப் போட்டியும்
Friday, 25 Dec 2020
இன்றைய உலக ஒழுங்குமுறைக்கு அமைவாக மிகவும் சவாலான சூழ்நிலையில் இணைய வழிமூலமாக (Online) விளையாடும் வகையில் 304 (THREE- NOUGHT -FOUR) என்று அழைக்கப்படும் விளையாட்டு மிகமிக சிறப்பாக இணையத்தளத்தில் (the304game.com) வடிவமைக்கப்ட்டிருப்பதுடன் இவ் விளையாட்டின் முதலாவது உலகக்கிண்ணப் போட்டியும் இணைய வழித்தடமூடாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறியிருக்கின்றது. 304 விளையாட்டானது இலங்கையில் மிகவும் பிரபலமானது குறிப்பாக தமிழ் மக்களிடையே உயர்கல்வி நிலையாளர்கள் முதல் சாதாரண பாமரமக்கள் வரை 80 வயது தாண்டியும் பலதரப்பட்ட மக்களாலும் விளையாடப்பட்டு வந்தது. இதற்கென எழுதப்பட்ட விதிமுறைகள் எதுவும் இல்லாது விளையாடப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலும் போட்டிகள் சச்சரவாக முடிவடையும். ஆனாலும் மறு நிமிடமே அதே குழுவினரே இணைந்து விளையாடுவார்கள். இவ்வாறாக எழுதப்படாத, ஒழுங்கு படுத்தப்படாத, விதிகளோடு விளையாடப்பட்டு வந்தமையே ஏனைய உலக மக்களிடத்தில் சென்றடையத் தவறிவிட்டது. இந்த நிலைமையில் கணனி தொழில்நுட்ப துறையில் பயணித்து வரும் கனடா வாழ் ஈழத்தவரான திரு மகேன் வாகீசன் அவர்களது சிந்தனை இன்று ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளுடன் நெறிப்படுத்தப்பட்ட இணைய முறையில் விளையாடும் வகையில் 304 விளையாட்டு வடிவமைக்கப்பட்டிருப்பது இவ்விளையாட்டில் ஏற்பட்டுள்ள ஓர் புரட்சியே.
இந்த விளையாட்டை மற்ற சமூகத்திரும் விளையாடும் வகையில் செயற்படுத்தி அறிமுகப்படுத்துவதே அடுத்த முக்கிய இலக்காகும். விளையாட்டின் செயற்பாட்டு ஒலி ஒளி விளக்க வீடியோப்பதிவுகள் புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இதன்மூலம் தங்கள் நண்பர்களுடன் இணைந்து எளிதாக புரிந்துகொண்டு விளையாடமுடியும். இந்த இணைய முகப்பு பயன்பாட்டு முறைகள் அனைத்துமே மிக எளிமையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சாதாரண கணனிகள் அனைத்திலும் கூகிள் குறோம் வழித்தடம் மூலமே விளையாட முடியும். கைத்தொலைபேசி (Mobile Phone) மற்றும் ரபிலெற் (Tablet) களில் விளையாடக்கூடிய முறைகள் மட்டும் இன்னும் வடிவமைக்கப்படவில்லை. ஆனால் இவற்றிற்கான ஒழுங்கமைப்பு முறைகள் 2021 ம் ஆண்டின் மத்திய பகுதிக்குள் நிறைவுபெற்றுவிடும்.
போட்டி முடிவுகள்
எதிர்கால வெற்றி மற்றும் சாதனைகளுக்கு திரு.மகேன் வாகீசன் மற்றும் அவரது குழுவினருக்கு நல்வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். |
|||||||||||||||||||||||||||||||